தமிழ்நாடு

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு த.மு.எ. சங்கம் சார்பில் பாராட்டு

15th Sep 2020 02:41 PM

ADVERTISEMENT

 

தமிழக அரசின் கல்விச் சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை ஆசிரியை ச.பொன்மலருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைத் தலைவர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.நித்தியானந்தம் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியை ச.பொன்மலரை பாராட்டிக் கௌரவித்தார்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் சங்கத்தின் கிளை பொருளாளர் ஏ.மரியடேவிட், செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ஏ.சந்தானம், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைத் தலைவர் எஸ்.வி.கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT