தமிழ்நாடு

நாமக்கல்: ஆம் ஆத்மி கட்சி சார்பில் இலவச ஆக்ஸிஜன் பரிசோதனை

15th Sep 2020 04:54 PM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில் கரோனோ தொற்று அதிகமாகப் பரவும் நிலையில் அரசியல் கட்சிகள் பொது மக்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. 

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி  சார்பில் அதன் தேச கட்டமைப்பு தலைவர் சுதா தர்மலிங்கம், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி மற்றும் நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், கிராமப்புறங்கள் என பல இடங்களில் இலவசமாக நோய்த் தொற்று உள்ளதை அறிவதற்கான ஆக்ஸிஜன் பரிசோதனை செய்யப்பட்டது.

ஆக்ஸிஜன் பரிசோதனை செய்தவர்களது பெயர், முகவரி பெறப்பட்டு அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் உடனடியாக சம்மந்தப்பட்ட அரசுமருத்துவமனையை அணுக வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த இலவச பரிசோதனையில் ஏராளமான பொதுமக்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT