தமிழ்நாடு

திருச்சியில் கஞ்சித் தொட்டி திறந்து நூதனப் போராட்டம்

15th Sep 2020 12:32 PM

ADVERTISEMENT

 

திருச்சியில் சிஐடியு கட்சியைச் சேர்ந்தவர்கள் கஞ்சித் தொட்டி திறந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி செம்பட்டு பகுதியில் இயங்கி வந்து, 2 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட தனியார் தோல் தொழிற்சாலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய தொழிலாளர்கள் 55 பேருக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை வழங்கக் கோரி, திருச்சி சுந்தர் நகர்ப் பகுதியில் உள்ள தொழிற்சாலை உரிமையாளர் வீட்டு வாயில் முன் சிஐடியு கட்சியைச் சார்ந்த திருச்சி மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று கஞ்சித் தொட்டித் திறக்கும் போராட்டம் நடைபெற்றது. 

இதில் சிஐடியு நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT