தமிழ்நாடு

தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இறுதி பருவத் தேர்வு: அரசாணை வெளியீடு

15th Sep 2020 08:18 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வுகள் தொடர்பாக நிலவி வந்த குழப்பங்களைத் தீர்க்கும் விதமாக, தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து பல்கலைக்கழகங்களும் தேர்வு தேதிகளை வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னை பல்கலை. - செப்.21 முதல் 25 வரையும், அண்ணா பல்கலை. - செப். 22 முதல் 29 வரையும், மதுரை காமராஜர் பல்கலை. - செப்.17 முதல் 30 வரையும், பாரதியார் பல்கலை. - செப். 21 முதல் அக்.7 வரையும் மற்றும் பாரதிதாசன் பல்கலை. - செப். 21 முதல் 25 வரையும் தேர்வுகளை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT