தமிழ்நாடு

13 மாணவர்களின் மரணத்துக்கு திமுகவே காரணம்: முதல்வர் பழனிசாமி காட்டம்

15th Sep 2020 12:41 PM

ADVERTISEMENT


சென்னை: நீட் தேர்வு காரணமாக 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவே காரணம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பதிலளித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் பேரவைக் கூட்டத் தொடரில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமிக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது முதல்வர் பழனிசாமி பேசுகையில், நீட் தேர்வு எப்போது வந்தது? யார் காரணம்? எந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது? என்பது அனைவருக்கும் தெரியும். யாராலும் மறுக்க முடியாது. 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவே காரணம்

2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்ட வந்த சட்டத்தின் காரணமாகவே தற்போது நீட் தேர்வு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்த போதுதான் நீட் தேர்வுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு யாரால் கொண்டு வரப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கியது அதிமுக அரசுதான் என்று முதல்வர் பழனிசாமி ஆவேசமாகக் கூறினார்.
 

ADVERTISEMENT

Tags : neet tn cm
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT