தமிழ்நாடு

வேலூரில் 13 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

15th Sep 2020 06:15 PM

ADVERTISEMENT

 


வேலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி 11,034 ஆக இருந்த கரோனா பாதிப்பு, அடுத்த 15 நாட்களில் 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை மேலும் 81 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் இம்மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாத இறுதியில் ஆயிரத்தைக் கடந்திருந்த இப்பாதிப்பு ஜூலை 6-இல் 2,132-ஆகவும், ஜூலை 13-இல் 3,137, ஜூலை 18-இல் 4,039, ஜூலை 26-இல் 5,138, ஆகஸ்ட் 1-இல் 6,152, ஆகஸ்ட் 7-இல் 7,156, ஆகஸ்ட் 14-இல் 8,129, ஆகஸ்ட் 21-இல் 9,027, ஆகஸ்ட் 26-இல் 10,008, செப்டம்பர் 1-இல் 11,034, செப்டம்பர் 8-இல் 12,067ஆகவும் உயர்ந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், திங்கள்கிழமை வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,911}ஆக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கையும் 197-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இதுவரை 11,567 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

பாதிக்கப்பட்டோர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT