தமிழ்நாடு

தமிழகத்தில் வேலூர் உள்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

15th Sep 2020 03:42 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கின்றது. 

ADVERTISEMENT

இதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நிலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், புதுவையில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டஙகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடம். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்

வால்பாறை 3 செ.மீ மழையும், சோத்துப்பாறை, ஆத்தூர் தலா 2 செ.மீ மழையும், சின்னக்கல்லார், சோலையார், பந்தலூர் தாலுகா ஆபீஸ், ஓசூர், தேவலா, ஓமலூர், காஞ்சிபுரம், மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம், ஜமுனாமரத்தூர், திருவள்ளூர், கூடலூர் தலா 1 செ.மீ மழையும் பெய்துள்ளது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT