தமிழ்நாடு

ஊத்தங்கரை அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா

15th Sep 2020 12:59 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதிமுக கட்சியின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சி.தேவேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல்அமீது, நகரச் செயலாளர் பி.கே. சிவானந்தம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வேங்கன், கல்லாவி ஊராட்சி மன்றத்தலைவர் ராமன், அத்திப்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் சுதா குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நான்குமுனை சந்திப்பில் உள்ள அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சின்ன பாப்பா சின்ன தம்பி, உறுப்பினர் சிக்னல் ஆறுமுகம், சக்திவேல், மற்றும் ஒன்றிய நகரக் கிளைக் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT