தமிழ்நாடு

திருத்தங்கலில் அண்ணா பிறந்த நாள் விழா

15th Sep 2020 11:59 AM

ADVERTISEMENT

 

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் 112வது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை சிவகாசி மற்றும் திருத்தங்கலில் நடைபெற்றது. 

சிவகாசி காவல் நிலைய சாலையிலுள்ள அண்ணாதுரை உருவச் சிலைக்கு அதிமுக நகரச் செயலாளர் அசன் பத்ருதீன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. திருத்தங்கல் கடைவீதியில் உள்ள அண்ணாதுரை உருவச் சிலைக்கு அதிமுக நகரச் செயலாளர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் அதிமுக சிவகாசி ஒன்றிய செயலாளர் வி ஆர் கருப்பசாமி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிவகாசி நகர திமுக சார்பில் அக்கட்சியின் நகரப் பொறுப்பாளர் காளிராஜன் தலைமையில் இங்குள்ள அண்ணாதுரை உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

ADVERTISEMENT

நகர திமுக சார்பில் அக்கட்சியின் நகரப் பொறுப்பாளர் உதயசூரியன் தலைமையில் அங்குள்ள அண்ணாதுரை உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT