தமிழ்நாடு

அண்ணா பிறந்தநாள்: முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மரியாதை

15th Sep 2020 10:12 AM

ADVERTISEMENT

 

செப்டம்பர் 15 இன்று அறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்துக்கு முதல்வர், தணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அனைவராலும் மிகவும் அன்போடு அண்ணா என்றும் அறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்பட்டவர் அண்ணாதுரை. அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,  "நெஞ்சிலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்துவந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி" - அறிஞர் அண்ணா.  அங்ஙனமே ஆகட்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்தம் பிறந்தநாளில் அவரை மனதார வணங்கி போற்றுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT