தமிழ்நாடு

ராசிபுரம் அருகே 15-க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய வெறிநாய்

15th Sep 2020 12:03 PM

ADVERTISEMENT

 

ராசிபுரம் அருகேயுள்ள சந்திரசேகரபுரம் பகுதியில் பொதுமக்களை வெறிநாய் துரத்தித் துரத்தி கடித்துக் குதறியதால் 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

நாமக்கல் மாவட்டம் சந்திரசேகரபுரம் பகுதியில் வெறி நாய்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகள், கோழிக் கடைகளின் கோழி இறைச்சி கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுவதால், அங்கு வரும் நாய்கள் அதிக அளவில் உள்ளன. 

இதனால் இருசக்கர வாகனங்களில் வருவோரையும் துரத்தி நாய்களை கடித்ததில் காயம் ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனால் நாள்தோறும் பலர் நாய் கடிக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் வெறி பிடித்த நாய், தண்ணீர் பிடிக்க வந்த ஓங்காளியம்மன் கோவில் தெருவைச்  சேர்ந்த பெண்களை விரட்டி விரட்டி கடித்துக் குதறியது. இந்த வெறி நாய் ஒவ்வொரு பகுதியாக ஓட்டம் பிடித்த படி, வழியில் சென்றவர்களை எல்லாம் கடித்துள்ளது.

ADVERTISEMENT

நாய் கடிபட்டவர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட  ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.  ஒரே நாளில் மட்டும் வெறி நாய்  கடித்ததில்  11 பேர் காயம் அடைந்தனர்.  அனைவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றனர். இதில், பலத்த காயமடைந்தவர்கள்  தீவிர சிகிச்சைக்கு அனுமதியாகியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, ‘‘அதிகாலை முதல் பொது மக்களை கடித்து வரும் நாயைப் பிடிக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் அதிக அளவில் நாய்கள் சுற்றித் திரிந்து வருகிறது. அடிக்கடி  சிறுவர்கள் நாய் கடித்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT