தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகளில் 10% உள் இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்தார் முதல்வர்

15th Sep 2020 02:13 PM

ADVERTISEMENT

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 10 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.  

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக  அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. 

தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்புகளில் 10 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். 

மருத்துவப் படிப்புகளில் தமிழக மாணவர்களுக்கு இதன்மூலமாக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நடப்பு கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வரும் என்றும் முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT