தமிழ்நாடு

இந்தியைக் காப்பாற்றுவதை விட இந்தியரைக் காப்பாற்றுங்கள்: அமித் ஷாவிற்கு ஸ்டாலின் வேண்டுகோள்

14th Sep 2020 07:20 PM

ADVERTISEMENT

 

சென்னை: இந்தியைக் காப்பாற்றுவதை விட  கொரோனாவில் இருந்து இந்தியரைக் காப்பாற்றுவதில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்கள் மாலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் திரு. அமித்ஷா அவர்கள், இந்தி மொழி இந்நாட்டை ஒருங்கிணைப்பதாகச் சொல்லி இருக்கிறார். பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி எப்படி ஒருங்கிணைக்க முடியும்?

ADVERTISEMENT

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும் ஒன்றாகத்தான் இந்தி இருக்கிறது என்பதை திரு. அமித்ஷா அவர்கள் உணர வேண்டும்!

இந்தியைக் காப்பாற்றுவதை விட, கொரோனாவில் இருந்து இந்தியரைக் காப்பாற்றுவதில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்!           

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT