தமிழ்நாடு

பிளஸ் 1 பொதுத் தேர்வு: மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் செப். 16-ல் வெளியீடு

14th Sep 2020 03:40 PM

ADVERTISEMENT

 

மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வெழுதி,  மறுமதிப்பீடு / மறுகூட்டல் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் வெளியிடுதல் குறித்த தகவலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும்  செய்திக்குறிப்பில், மார்ச் 2020-ல் நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் http://www.dge.tn.gov.in/  என்ற இணையதளத்தில் (நோட்டிஃபிகேஷன் பக்கத்தில்) 16.09.2020 அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. 

இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், உடன் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 

Tags : exam update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT