தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: தேனியில் சவம் போல வேடமிட்டு ஆர்ப்பாட்டம்

14th Sep 2020 03:00 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சவம் போல வேடமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் முனீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு,  இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பிரேம்குமாருக்கு இறந்த சவம் போல மாலை அணிவித்து வேடமிட்டு, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை தூக்கி வந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மத்திய, மாநில அரசுகள் மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

ADVERTISEMENT

அப்போது, ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் சவம் போல கொண்டு வரப்பட்டவரின் வேடத்தை கலைக்க முயன்றனர். இதனால், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

ஆட்சியர் அலுவலகம் முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மீது தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT