தமிழ்நாடு

வருகைப் பதிவு செயலியை முதல் முறையாகப் பயன்படுத்திய மக்களவை உறுப்பினர்கள்

14th Sep 2020 04:05 PM

ADVERTISEMENT


புது தில்லி: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், வருகைப் பதிவுக்கான செல்லிடப்பேசி செயலியைப் பயன்படுத்தி மக்களவை உறுப்பினர்கள் தங்களது வருகையைப் பதிவு செய்தனர்.

மக்களவைக்கு இன்று காலை வருகை வந்த மக்களவை உறுப்பினர்கள், தேசிய தகவல் மையம் வடிவமைத்த வருகைப் பதிவு செயலியை இன்று முதல் முறையாகப் பயன்படுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், வருகைப் பதிவேட்டை தொட்டு அதில் கையெழுத்திடுவதன் மூலம் கரோனா பரவும் அபாயம் இருப்பதால், செல்லிடப்பேசி மூலம் வருகைப் பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

மக்களவைக்கு வருகை தந்த உறுப்பினர்கள் அனைவரும், செல்லிடப்பேசி செயலி மூலம் தங்களது வருகையைப் பதிவு செய்தனர்.
 

ADVERTISEMENT

Tags : Parliament
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT