தமிழ்நாடு

புதுச்சேரியில் மின்துறை பொறியாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

14th Sep 2020 02:51 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவை மாநில மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூடிய நிலையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மின்துறை தனியார் மயமாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில், மின்துறையினர், புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டு அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT