தமிழ்நாடு

சென்னையில் கரோனா பலி 3 ஆயிரத்தை நெருங்குகிறது

14th Sep 2020 11:34 AM

ADVERTISEMENT

 

சென்னையில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்குகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனாவுக்கு 10,393 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் வெறும் 7 சதவீதம்தான்.

சென்னையில் இதுவரை 1,48,584 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 91 சதவீதம் பேர் அதாவது 1,35,215 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு 2,976 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக தொடர்ந்து அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில்தான் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று  வருகிறார்கள்.  குறைந்தபட்சமாக மணலியில் 133 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT