தமிழ்நாடு

புதுவையில் 20 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

14th Sep 2020 12:51 PM

ADVERTISEMENT

 

புதுவை மாநிலத்தில் 20 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு; ஒரே நாளில் 414 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட  நிலவரப்படி புதுச்சேரியில் 308 நபர்களுக்கும், காரைக்காலில் 74 நபர்களுக்கும், ஏனாமில் 29 நபர்களுக்கும், மாஹேவில் 3 நபர்களுக்கும் என மொத்தம் 414 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 4805 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 15027 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT

இன்று புதுச்சேரியில் 8 நபர்களும்,  காரைக்காலில் 1 நபரும் என ஒன்பது பேர் கரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து, மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 394 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,226 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT