தமிழ்நாடு

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தாயுடன் தீக்குளிக்க முயற்சி

14th Sep 2020 03:43 PM

ADVERTISEMENT

 

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தாயுடன் வந்த விவசாயி ஒருவர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மேக்கினி நாடு பகுதியை சேர்ந்தவர் பூச்சம்மாள்(52). இவரது மகன் (35). இவர்களுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த பூபதி, முருகேசன் என்ற இருவர் அபகரிக்க முயற்சி செய்வதுடன் தாய், மகன் இருவரையும் குடியிருக்கும் பகுதியில் இருந்தும், விவசாய நிலத்திற்குள் வராத படியும் தகராறில் ஈடுபட்டு வந்தனர். 

ADVERTISEMENT

இதனால் விரக்திக்குள்ளான தாய், மகன் இருவரும் திங்கள்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் மனு அளிக்க வந்த போது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். 

அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT