தமிழ்நாடு

யோகா, இயற்கை மருத்துவம் - பிஎன்ஒய்எஸ் மருத்துவ பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

11th Sep 2020 06:01 PM

ADVERTISEMENT


சென்னை: யோகா மற்றும் இயற்கை மருத்துவம் - பிஎன்ஒய்எஸ் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  தமிழ்நாடு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2020-21 ஆம் ஆண்டிற்கு பி.என்.ஒய்.எஸ். மருத்துவ பட்டப்படிப்பில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வில் முதன் நேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து, இணையவழி மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 03.08.2020 அன்று முதல் வரவேற்கப்பட்டன.

விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை எங்களது அலுவலக வலைதளமான “www. tnhealth.tn.gov.in’’பதிவிறக்கம் செய்ய மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான கடைசி நாட்கள் முறையே 28-08-2020 மற்றும் 31-08-2020-லிருந்து 12.09.2020 முடிய மாலை 05.00 மணி மற்றும் 15.09.2020 முடிய மாலை 05.30 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரமான வலைதள அறிவிக்கை, மேற்கண்ட பி.என்.ஒய்.எஸ். படிப்பிற்கான அரசு மற்றும் சுயநிதி சிறுபான்மையினர் / சிறுபான்மையினரற்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளின் விவரம், தகவல் தொகுப்பேடு, விருப்பப்படிவத்துடன் கூடிய பொது மற்றும் சிறப்பு விண்ணப்ப பதிவிறக்கம் மற்றும் அவற்றின் கட்டணம், குறைந்தபட்ச தகுதி, மதிப்பண்கள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், படிப்புகளின் விவரம், சிறப்பு பிரிவினர், அடிப்படைத்தகுதி, கல்விக்கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு “www. tnhealth.tn.gov.in’’ என்ற வலைதளத்தை தொடர்புக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : exam update application
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT