தமிழ்நாடு

கொடைக்கானலில் தொடர் மழையால் சாலைகள் சேதம்: வாகன ஓட்டிகள் சிரமம்

11th Sep 2020 02:38 PM

ADVERTISEMENT


கொடைக்கானலில் தொடர் மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். 

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வந்தது. இந்த மழையால் கொடைக்கானல் பகுதிகளான,பிரகாசபுரம்,செண்பகனுர்,ரைபிள்ரேஞ்ச் சாலை,பாம்பார்புரம்,டிப்போ"பகுதி, அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளது. 

மேலும் இதே பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது இதனால் அப் பகுதிகளில் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மேக மூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் சேதமடைந்த  சாலைகள் தெரியாத நிலையில் அதில் வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். 

எனவே சேதமடைந்த சாலைகளை மாவட்ட நிர்வாகம் சரி செய்து கொடுக்க வேண்டுமென வாகன ஓட்டுனர்கள்,பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

Tags : Roads damaged
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT