தமிழ்நாடு

நாமக்கல்லில் கோழியின ஆராய்ச்சி மையம் ஏற்படுத்த நடவடிக்கை: அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தகவல்

11th Sep 2020 11:38 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நாமக்கல்லில் கோழிப் பண்ணைகள் அதிகம் நிறைந்துள்ளதால் இங்கு கோழியின ஆராய்ச்சி மையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை காலை நாமக்கல் வழியாக திருப்பூர் நோக்கிச் சென்ற அவர் ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.  இதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேலம் மாவட்டம் தலைவாசலில் பிரம்மாண்ட முறையில் கால்நடைப் பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் கோழிப் பண்ணைகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. ஏற்கனவே இங்கு நோய்களை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. கோழியின ஆராய்ச்சி மையம் நாமக்கல்லில் அமைக்க வேண்டும்  என்ற கோரிக்கை  உள்ளது. 

இது தொடர்பாக முதல்வருடன் பேசி நிகழாண்டிலேயே நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல்,  பல்லடம் கோழிப் பண்ணையாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு உதவிகளை தமிழக முதல்வர் செய்து கொடுத்துள்ளார். முட்டைகள் பண்ணைகளில் தேங்கா வண்ணம்  உடனுக்குடன் விற்பனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை முதல்வர் மேற்கொண்டதற்கு பண்ணையாளர்களே நேரடியாக பாராட்டு தெரிவித்துள்ளதாக அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கூறினார்.

ADVERTISEMENT

Tags : poultry research center
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT