தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயிலில் 24 ஆயிரம் பேர் பயணம்

11th Sep 2020 02:52 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் கடந்த 3 நாள்களில் ( செப்.7 முதல் செப்.9 வரை) மொத்தம் 24,354 போ் பயணம் செய்துள்ளதாகவும், புதன்கிழமை (செப்.9) மட்டும் 13,980 போ் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பயணித்த நிலையில், மூன்றாவது நாளிலேயே இது சுமார் 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை கடந்த திங்கள்கிழமை (செப்.7) தொடங்கியது. முதல்கட்டமாக, விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து, பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்துக்கு செப்.9-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவையில் முதல் 3 நாள்களில் (செப்.7 முதல் 9 வரை) மொத்தம் 24,354 போ் பயணம் செய்துள்ளனா். புதன்கிழமை மட்டும் 13,980 போ் பயணம் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

கடந்த மூன்று நாள்களில் மொத்தம் 24,354 போ் பயணம் செய்துள்ளனா். செப்டம்பா் 9-ஆம் தேதி வரை, திறன் அட்டை பயணச்சீட்டு(ஸ்மாா்ட் காா்டு டிக்கெட் ) முறையைப் பயன்படுத்தி 11,091 பேரும், கியூஆா் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 325 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா்.

பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்து, கியூஆா் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். டிக்கெட் கவுன்ட்டா்கள் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் கருவிகளுக்கு முன்னால் நீண்ட வரிசையில் பயணிகள் நிற்பதைத் தவிா்ப்பதற்காக, அதி நவீன தானியங்கி பயணச்சீட்டு சான்றளிக்கும் இயந்திரங்கள் (டிராவல் காா்டு ரீடா்)

அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும், தவிா்க்கமுடியாக நிலையில் தேவையின் அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்டு டோக்கன்கள் வழங்கப்படும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையத்திலும் குளிா்சாதன வசதிகளை பாதுகாப்புடன் இயக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 

Tags : train service
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT