தமிழ்நாடு

சென்னையில் மொத்த பாதிப்பில் 7% பேர் மட்டுமே சிகிச்சையில்

11th Sep 2020 11:42 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் கரோனா பாதித்த ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 7% அதாவது 10,845 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் 91% குணமடைந்துவிட்டனர். அதாவது வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,31,840 குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 10,845 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2921 பேர் பலியாகிவிட்டனர்.

சென்னையில் கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகரில் மட்டுமே ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அம்பத்தூர், வளசரவாக்கம் மண்டலங்களில் 800 என்ற அளவில் பாதிப்பு உள்ளது.

இதுவரை அண்ணாநகதில் 15 ஆயிரம் பேரும், கோடம்பாக்கத்தில் 14 ஆயிரம் பேரும் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தேனாம்பேட்டையில் 12 ஆயிரம் பேரும், தண்டையார்பேட்டையில் 11 ஆயிரம் பேரும் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

இதுவரை சென்னையில் 1,45,606 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,31,840 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT