தமிழ்நாடு

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் உள்பட 2 பேர் கரோனாவுக்கு பலி

11th Sep 2020 03:58 PM

ADVERTISEMENT

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய வட்டாட்சியர் மற்றும் இளநிலை உதவியாளர் கரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் 3004 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். 48 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கரோனா தொற்றுக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் நாமக்கல் ஆட்சியர் அலுவலக மாவட்ட மேலாளர் (பொது) சந்திர மாதவன் மற்றும் இளநிலை வருவாய் உதவியாளர் ராசிபுரம் வட்டம் பாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(54) ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு வருவாய் உதவியாளர் செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே நாமக்கல் அரசு மருத்துவமனையில், பின்னர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட மாவட்ட மேலாளர்கள் சந்திர மாதவன் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் வருவாய்துறை ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளது மற்ற ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குனருக்கு கரோனா: நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனராக எஸ். சோமசுந்தரம் பணியாற்றி வருகிறார். இவர் இரு தினங்களுக்கு முன் கோவை சென்ற நிலையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

ADVERTISEMENT

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: இளநிலை வருவாய் உதவியாளர் செல்வராஜூக்கு கரோனா தொற்று பாதிப்பும், அதிகளவில் சர்க்கரை பாதிப்பும் இருந்துள்ளது. இதனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்டாட்சியரை பொறுத்தவரை முதல் நாள் வரை நலமுடன் இருப்பதாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு குறுஞ்செய்தி எல்லாம் அனுப்பி வந்தார். இதற்கிடையில் தான் திடீரென அவர் இறந்துள்ளார். இருவரது உயிரிழப்பும் வேதனை அளிக்கிறது என்றார்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT