தமிழ்நாடு

தோரணமலை முருகன் கோவிலில் விவசாயம் தழைக்க வேண்டி கலச பூஜை

11th Sep 2020 12:00 PM

ADVERTISEMENT

பாவூர்சத்திரம்: தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் விவசாயம் தழைக்க வேண்டி கலச  பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தோரணமலை முருகன் கோவிலில் மாதந்தோறும் கடைசிவெள்ளி அன்று விவசாயம் தழைக்க வேண்டி கலச  பூஜை நடைபெறும். கடந்த 5 மாதங்களாக பொதுமுடக்கம்  காரணமாக நடைபெற வில்லை. 

தற்போது பொதுமுடக்கம் தளர்வு காரணமாக இன்று காலை இப் பூஜை நடைபெற்றது. இதற்காக முருக பக்தர்கள் அதிகாலை 5 மணிக்கு மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kalasa Pooja
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT