தமிழ்நாடு

காடையாம்பட்டி ஒன்றியத்தில் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட பணிகள்: எம்எல்ஏ வெற்றிவேல் தொடங்கி வைத்தார்

11th Sep 2020 02:04 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட தாராபுரம் கஞ்சநாயக்கன்பட்டி, மோரூர், சின்னவடக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட சுமார் ரூ.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை பூமிபூஜை செய்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் பணியினை தொடங்கி வைத்தார். 

பொம்மியம்பட்டியில் நடைபெற்ற பஞ்சாயத்து அலுவலக கட்டட பூமி பூஜையின் போது மாற்று கட்சியில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்டோர் சட்டப்பேரவை உறுப்பினர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

இதையடுத்து அதிமுகவில் இணைந்த உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்கான நிலத்தை தானமாக அளித்த அம்மாய்யம்மாள் பன்னீர்செல்வத்திற்கு பொன்னாடை போர்த்தி அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் இனிப்புகளை வழங்கி அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, சேரன்செங்குட்டுவன், மாவட்ட இணைச்செயலாளர் ஈஸ்வரிபாண்டுரங்கன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு பொதுமக்கள் மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்ப்பு அளித்தனர்.

Tags : Kadayampatti Union
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT