தமிழ்நாடு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 96,551 பேருக்கு கரோனா பாதிப்பு: 1,209 பேர் பலி

11th Sep 2020 10:30 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 96,551 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 96,551 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 45,62,415 -ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,209 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 76,271-ஆக அதிகரித்தது. 

நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 35,42,664-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 9,43,480 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாட்டில் தொற்றால் அதிக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் தொடர்கிறது. மாநிலத்தில் இதுவரை 2,53,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,86,462 பேர் குணமடைந்துள்ளனர், 27,787 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆந்திரத்தில் 97,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மாநிலத்தில் இதுவரை 4,25,607 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், அதே நேரத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4,634 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய தலைநகர் தில்லியில் 23,773 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் , 1,72,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், தொற்று காரணமாக இதுவரை 4,638 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாடு முழுவதும் கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 11,63,542 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 10-ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 5,40,97,975 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘அறிகுறிகள் காணப்படுவோருக்கு பரிசோதனை’: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவோருக்கு ஆன்டிஜென் துரித பரிசோதனையில் ‘நெகடிவ்’ (கரோனா இல்லை) என முடிவு வந்தாலும், அவருக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கையின் மூலமாக கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும். சில மாநிலங்கள் இந்த நடவடிக்கையைக் கடைப்பிடிப்பதில்லை என்று புகாா் எழுந்துள்ளது.

எனவே, ஆன்டிஜென் பரிசோதனையில் ‘நெகடிவ்’ என முடிவு வருபவா்களுக்கு கரோனா அறிகுறிகள் காணப்பட்டால், அவா்களுக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்குக் கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளோம். அதை ஆராய்வதற்கு தனிக் குழுவை நியமிக்குமாறும் வலியுறுத்தியுள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Tags : coronavirus India
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT