தமிழ்நாடு

ஈரோட்டில் ரூ.95.50 லட்சம் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

11th Sep 2020 04:11 PM

ADVERTISEMENT

 

ஈரோடு மாநகர் பகுதியில் ரூ.95.50 மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

ஈரோடு ஞானபுரம் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதைத்தொடர்ந்து வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ரூ 6 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடையை எம்எல்ஏக்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர் இதேபோன்று வீரப்பன்சத்திரம் எம்ஜிஆர் வீதியில் ரூ 8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தனர். இதைத்தொடர்ந்து முனிசிபல் காலனியில் ரூ 50 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர். இதைத்தொடர்ந்து ராஜாஜிபுரத்தில் ரூ 8 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தனர். 

ADVERTISEMENT

அதைத்தொடர்ந்து ராஜாஜி புரத்தில் ரூ 15 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் எம்எல்ஏக்கள் கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தனர்இவ்வாறாக மொத்தம் ரூ. 95.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட பணிகளை எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கருங்கல்பாளையத்தில் உள்ள சி.எச்.1 அறிஞர் அண்ணா தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் சார்பில் நடைபெற்ற பொன்விழா ஆண்டு கல்வெட்டியல் முன்னாள் அமைச்சர் பிசி ராமசாமி திறந்து வைத்தார். 

அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் சிலையை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் தென்னரசு திறந்துவைத்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ சிலையை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே வி ராமலிங்கம் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செல்வகுமார சின்னையன் முன்னாள் மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம்பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஸ் கேசவமூர்த்தி ஜெயராஜ் கோவிந்தராஜ் தங்கமுத்து மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், பெரியார் நகர அவைத்தலைவர் மீன் ராஜா உட்பட பலர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT