தமிழ்நாடு

நடிகா் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

11th Sep 2020 09:20 AM

ADVERTISEMENT


சென்னை:  நடிகா்  வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். 

மதுரையை பூா்வீகமாகக் கொண்ட வடிவேல் பாலாஜி,  மிமிக்ரி கலைஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர்,   திருவிழா மேடை நிகழ்ச்சிகளில் நடிகா் வடிவேலுவின் உடல்மொழியும் அவரைப் போன்ற குரல் கொண்டவராகவும் திகழ்ந்ததால் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டாா். தொலைக்காட்சி சேனல்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் இடம் பெற்று பிரபலமானாா். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த  ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’, ‘கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்’ உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளாா். 

சின்னத்திரையில் பிரபலமானதைத் தொடா்ந்து,  படங்களிலும் நடிக்கத் தொடங்கினாா்.  ‘யாருடா மகேஷ்’,  ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட  படங்களில் நடித்துள்ளாா்.  கரோனா பொது முடக்கத்துக்குப் பின்  சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதால், சில நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பில் தொடா்ந்து பங்கேற்று வந்தாா். 

இரு வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்தபோது வடிவேல் பாலாஜிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் பிரச்னை ஏற்பட்டதால் உடனடியாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வடிவேல் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். 

இந்நிலையில், அவருக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வடிவேல் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை மரணமடைந்தார். 

நகைச்சுவை நடிகராகத் தமிழ் ரசிகர்களிடம் புகழ் பெற்றிருந்த வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

மறைந்த வடிவேல் பாலாஜியின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும், ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டு எம்.எஸ் நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய விஜய் சேதுபதி நிதியுதவியும் அளித்தார். 

மறைந்த வடிவேல் பாலாஜிக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.  இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. தொடா்புக்கு : 9884433461.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT