தமிழ்நாடு

சென்னையில் தண்ணீர் டேங்கர் லாரி மோதி 4 வயது சிறுவன் பலி

11th Sep 2020 09:59 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் அருகே தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பட்டினம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை காலை சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது, கட்டுப்பாடின்றி வந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதியது. இதில், தனது தாத்தாவுடன் சென்றுகொண்டிருந்த தரமணியைச் சேர்ந்த பிரணீஷ் என்ற 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 3 பேர் காயமடைந்தனர். சிக்னல் கம்பங்கள், வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 

சிறுவன் உயிரிழந்ததை அறிந்த லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

விபத்து ஏற்படுத்திய லாரியை கைப்பற்றிய போக்குவரத்து காவலர்கள் தப்பிச் சென்ற ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : accident
ADVERTISEMENT
ADVERTISEMENT