தமிழ்நாடு

சென்னை மாநகரப் பேருந்தில் 1.1 கோடிப் பேர் பயணம்; ரூ.10 கோடி வருவாய்

11th Sep 2020 03:26 PM

ADVERTISEMENT

 

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இன்று காலை  வரையில் ஒரு கோடியே ஒரு இலட்சத்து 23 ஆயிரம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் இது பற்றி தகவல் தெரிவித்துள்ளார்.

அதில், தமிழக முதல்வர் பழனிசாமி, கடந்த 01.09.2020 முதல் அந்தந்த மாவட்ட எல்லைக்குள் பேருந்துகளை இயக்கிட உத்தரவிட்டார்கள். அதன்படி சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. மேலும், கடந்த 07.09.2020 முதல் மாவட்ட எல்லைக்குள்ளான பேருந்து இயக்கத்தினை தளர்த்தி, தமிழகம் முழுவதும் மாநிலத்திற்குள்ளான அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அறிவித்தார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத்துறை அமைச்சரின் உத்தரவின்படி, பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, தனி மனித இடைவெளியுடன் பயணம் செய்திட ஏதுவாக, பயணிகள் அதிகம் பயணம் செய்யும் தடங்களில் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கிடவும் கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகள் உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதோடு, ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள், கையடக்க கிருமிநாசினி ஆகியவை தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் இல்லாத பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள கிருமி நாசினியை பயன்படுத்திய பின்னரே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கடந்த 01.09.2020 அன்று பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டு, அன்றைய தினம் ஏறத்தாழ 6 இலட்சம் பயணிகள் பயணம் செய்தனர். பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு, நாளொன்றுக்கு ஏறத்தாழ 2,400க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு, ஏறத்தாழ 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். குறிப்பாக, மின்சார இரயில் சேவை உள்ள புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், மீஞ்சூர், அம்பத்தூர் மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளில் பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ள நிலையில், கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இப்பேருந்துகள் இயக்கத்தின் வாயிலாக, கடந்த 01.09.2020 முதல் நாளது வரையில் ஒரு கோடியே ஒரு இலட்சத்து 23 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக, ஏறத்தாழ 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

Tags : lockdown bus service
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT