தமிழ்நாடு

கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கம் திறப்பு: தரைப்பாலம் மீது வெள்ளம்

10th Sep 2020 04:45 AM

ADVERTISEMENT

 


திருத்தணி: ஆந்திர மாநிலம், அம்மப்பள்ளி அணை திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக எல்லையான பள்ளிப்பட்டை அடுத்த கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலத்தின் மீது வெள்ளம் கரைபுரண்டோடியது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் சித்தூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீர் திறந்து, வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டம், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறி, செவ்வாய்க்கிழமை இரவு, பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றைச் சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த கரையோர மக்களுக்கு, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார். 
இதையடுத்து, ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 300 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு அங்கு தொடர் மழையின் இருப்பைப் பொறுத்து, இந்த தண்ணீரின் அளவை உயர்த்த வாய்ப்புள்ளதாகவும், இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் கவனமாக இருப்பதுடன், வெளி அகரம், நெடியம், சாமந்தவாடா, சொரக்கா பேட்டை தரைப்பாலத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால், பாலத்தைக் கடக்க முயலவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 இந்நிலையில், பள்ளிப்பட்டு அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, பாதுகாப்புப் பணியில் வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
 எனினும் பொதுமக்கள் நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தின் மீது சென்று வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT