தமிழ்நாடு

ஜன. 20ல் இறுதி வாக்காளர் பட்டியல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

10th Sep 2020 05:27 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜனவரி மாதம் 15 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறிய நிலையில், தற்போது ஜனவரி 15 ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல் வெளியிட்டுள்ளார். 

முன்னதாக, வருகிற நவம்பர் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை www.nvsp.in என்ற இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம் என்றும் VOTER HELP LINE என்ற செல்லிடப்பேசி செயலியையும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT