தமிழ்நாடு

கடலாடி அருகே மூக்கையூரில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

10th Sep 2020 03:25 PM

ADVERTISEMENT

 

இராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் ஊராட்சியில் சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் இயற்கை பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

மூக்கையூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.தொம்மை தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் அவர்கள்  முன்னிலை வகித்தார்.

சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் நா.பொன்னையா தலைமையிலான பத்து தீயணைப்பு வீரர்கள் மூக்கையூர் கடற்கரையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஏற்படும் இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களை மீட்பது குறித்து போலி ஒத்திகைப்பயிற்சி நடைபெற்றது.

இதில் கிராம இளைஞர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றிக் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT