தமிழ்நாடு

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி துணை மருத்துவப் படிப்புகளுக்கு 130 இடங்கள் ஒதுக்கீடு

10th Sep 2020 01:40 AM

ADVERTISEMENT

 


சென்னை கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில்  துணை மருத்துவப் படிப்புகளுக்கு 130 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 
இது குறித்து சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், வரும் 2020-21-ஆம் கல்வி ஆண்டில், துணை மருத்துப் படிப்புகளுக்கு 130 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் மருத்துவ லேப் டெக்னீசியன் படிப்புக்கு (2 வருடம்) 50 இடங்களும், டயாலிசிஸ் டெக்னீசியன் படிப்புக்கு (ஒரு வருடம்) 20 இடங்களும், மயக்கவியல் துறை டெக்னீசியன் படிப்புக்கு (ஒரு வருடம்) 20 இடங்களும், அறுவை சிகிச்சை அரங்க டெக்னீசியன் படிப்புகளுக்கு (ஒரு வருடம்) 20 இடங்களும், அவசர சிகிச்சை டெக்னீசியன் படிப்புக்கு (ஒரு வருடம்) 20 இடங்கள் என மொத்தம் 130 இடம் ஒதுக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT