தமிழ்நாடு

5 நாள்களுக்கு இணையவழி வகுப்புகளுக்கு விடுமுறை: அமைச்சர் செங்கோட்டையன்

10th Sep 2020 05:11 AM

ADVERTISEMENT

 

கோபி: செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு இணையவழி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 1 கோடியே 19 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

ADVERTISEMENT

புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும், கண்களுக்கு ஓய்வு அளிப்பதற்காகவும் செப்டம்பர் 21 முதல் 25ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு இணையவழி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் இதைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு என்பது கரோனா தொற்று குறைந்த பின்னர்தான் முடிவெடுக்கப்படும். பகுதி நேர நூலகங்களை முழு நேர நூலகங்களாக மாற்றம் செய்வதற்காக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT