தமிழ்நாடு

அம்பத்தூர் மகளிர் ஐடிஐ-யில் ஒப்பந்த உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

9th Sep 2020 03:43 PM

ADVERTISEMENT


சென்னை: அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்  (மகளிர்) தற்காலிக ஒப்பந்த உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு சார்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூரில் இயங்கி வருகிறது. இதில், தற்காலிக ஒப்பந்த உதவியாளர் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பம் மற்றும் தகுதிச் சான்று நகல்களை 21.9.2020 க்குள் வந்து சேரும்படி அனுப்பக் கோரப்படுகிறது. நிலைய மேலாண்மை குழு (ஐஎம்சி)யின் முடிவே இறுதியானது.

ஒப்பந்த உதவியாளர் - ஒரு பணியிடம்
கல்வி தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கணினி கையாளும் திறன் கொண்டிருத்தல் வேண்டும்.
வயது - குறைந்த பட்சம் 18 வயது முடித்திருக்க வேண்டும்.
இனம் - ஜிடி - நான் பிரீயாரிட்டி
பதவியின் பெயர் - ஒப்பந்த உதவியாளர்
ஒப்பந்த காலம் - ( 11 மாதங்கள் )
சம்பளம் - 12,000/-

ADVERTISEMENT

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
Member Secretary ,
IMC of Govt.ITI (Women)
Ambattur,
Chennai-600 098
Mail Id - principalambattur@gmail.com
Ph No. 044-29565988.

இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT