தமிழ்நாடு

ஆரணி அருகே சாலை விபத்து: டெங்கு பணியாளர் பலி

7th Sep 2020 05:56 PM

ADVERTISEMENT

 

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே சாலை விபத்தில் பேரூராட்சி சேர்ந்த டெங்கு பணியாளர் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆரணி பேரூராட்சியில் டெங்கு பணியாளராக வள்ளுவர் மேடு சேர்ந்த பரிமளா கணவர் பெயர் கார்த்தி என்பவர் வேலை செய்து வருகிறார்கள்.  திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் காலை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து காலை உணவருந்தி விட்டு மறுபடியும் அலுவலகம் சென்றுள்ளார். 

ADVERTISEMENT

அப்போது செல்லும் வழியில் அரசு மதுபான கடை அருகே பெரியபாளையம் கும்முடிபூண்டிசெல்லும் சாலையில் ஆரணி பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஆரணி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி ஏற்றுக்கொண்டுவந்த மினி லாரி அவர் மீது பின்னால் மோதியதில் பலத்த காயமடைந்த  தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி காவல்துறையினர் பரிமளாவை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.  பரிமளா மீது மோதிய மினி வேன் நிலை தடுமாறி சாலை அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காவல்துறை ஓட்டுனரை வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT