தமிழ்நாடு

பா.ஜ.க.வுடன் தொடர்ந்து சகோதரத்துவம், நட்புடன் இருந்து வருகிறோம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

6th Sep 2020 05:36 PM

ADVERTISEMENT

பா.ஜ.க.வுடன் தொடர்ந்து சகோதரத்துவம், நட்புடன் இருந்து வருவதாக  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 

'கிராமங்களில் கடைக்கோடியில் இருக்கும் மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் 'சாட்டிலைட் வில்லேஜ்' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார். 

2021-ல் நடைபெறும் தர்ம யுத்தத்தில் அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும். இளைஞர்களின் எழுச்சி அதிமுக பக்கமே உள்ளது' என்று பேசியுள்ளார். 

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளுமாறு ஹெச்.ராஜா தினமும் எங்களை அறிவுறுத்தி வருகிறார். பா.ஜ.க.வுடன் தொடர்ந்து சகோதரத்துவம், நட்புடன் இருந்து வருகிறோம்.

10 ஆண்டுகளாக மௌன விரதம் இருந்து வரும் மு.க. அழகிரி மௌனம் கலைத்தால்தான் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும்' என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT