தமிழ்நாடு

ஈரோட்டில் மு.க. அழகிரிக்கு ஆதரவாக பரபரப்பு போஸ்டர்

4th Sep 2020 12:26 PM

ADVERTISEMENT

 ஈரோடு: மறைந்த  திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியை தமிழக அரசியல் களத்திற்கு அழைக்கும் வகையில் ஈரோடு மாநகர் பகுதிகளான கருங்கல்பாளையம், மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா உள்பட மாநகர் பகுதி முழுவதும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  

அந்த போஸ்டரில் அஞ்சா நெஞ்சரே மௌனத்தை கலைத்து விட்டு கருணாநிதியின் தொண்டர்களை காப்பாற்று என்று வசனம் இடம்பெற்றுள்ளது. 

தற்போது அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கி இருக்கும் அழகிரியை மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற வகையில் அவருக்கு ஆதரவாக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : poster
ADVERTISEMENT
ADVERTISEMENT