ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அத்திப்பாடி ஊராட்சிமன்ற தலைவர் உயிர் பாதுகாப்புக் கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி ஊராட்சிமன்றத் தலைவராக உள்ளவர் சுதா குமார் இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் மூர்த்தி மற்றும் ஒன்றிய குழு தலைவரின் கணவர் குமரேசன் ஆகியோர் சேர்ந்து ஊராட்சியில் எந்த ஒரு பணியும் செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும், அதனைக் கண்டித்து ஊராட்சிமன்றத் தலைவர் சுதா குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். எங்களுக்கு உயிர் பாதுகாப்பு வேண்டும் எனக் கோரியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். தர்ணாவில் ஈடுபட்டுள்ள தலைவரிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் திட்டம் மகேஷ்குமரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.