தமிழ்நாடு

பழைய பஸ் பாஸை செப்டம்பர் 15 வரை பயன்படுத்தலாம்: எம்.ஆர். விஜயபாஸ்கர்

1st Sep 2020 03:15 PM

ADVERTISEMENT


சென்னை: அரசுப் பேருந்துகளில் பயணிக்க பொதுமக்கள் பெற்ற மாதப் பயணச் சீட்டை (பஸ் பாஸ்) செப்டம்பர் மாதம் 15-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் மாதம் 24-ம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், மார்ச் மாதம் பொதுமக்கள் பெற்ற பேருந்து மாதப் பயணச் சீட்டைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று நான்காம் கட்டமாக தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே, மார்ச் மாதம் பெற்ற பேருந்து மாதப் பயணச் சீட்டுகளை செப்டம்பர் மாதத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொது மக்கள் ஒருமாவட்டத்தில் இருந்து அடுத்த மாவட்டத்துக்குச் செல்ல வசதியாக, எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும். இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும். அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT