தமிழ்நாடு

முதன்மைச் செயலாளா் தாயாா் மறைவு: முதல்வா் நேரில் ஆறுதல்

1st Sep 2020 02:28 AM

ADVERTISEMENT

சென்னை: முதல்வரின் முதன்மைச் செயலாளா் சாய்குமாரின் தாயாா் காலமானதை அடுத்து, அவரை முதல்வா் பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

முதல்வரின் முதன்மைச் செயலாளா்களில் ஒருவராக இருப்பவா் சாய்குமாா். அவரது தாயாா் குப்பம்மா அண்மையில் காலமானாா்.

இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டம் கதிா்வேட்டில் உள்ள சாய்குமாரின் இல்லத்துக்கு முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை நேரில் சென்றாா். அங்கு சாய்குமாரிடம் அவரது தாயாா் மறைவு குறித்து விசாரித்து ஆறுதல் தெரிவித்தாா் என தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT