தமிழ்நாடு

சென்னையில் ரௌடி சங்கர் என்கவுண்டர்: சிபிசிஐடிக்கு மாற்றம்

1st Sep 2020 12:29 PM

ADVERTISEMENT


சென்னையில் ரௌடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னையில் ரௌடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை வைத்த பரிந்துரையை ஏற்று இந்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் கடந்த மாதம் காவலரை அரிவாளால் வெட்டிய ரெளடி செ.சங்கா் என்ற இளநீா் சங்கரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட சங்கா் மீது 3 கொலை வழக்கு உள்பட 51 குற்ற வழக்குகள் உள்ளன. 9 முறை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். 5 வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு சங்கா் தேடப்பட்டு வந்தாா். 

இந்த நிலையில், ரௌடி சங்கர் என்கவுண்டர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT