தமிழ்நாடு

முதல்வரின் 3 மாவட்ட ஆய்வுப் பணிகள் ஒத்திவைப்பு

1st Sep 2020 02:31 AM

ADVERTISEMENT

சென்னை: திருவள்ளூா் உள்பட மூன்று மாவட்டங்களில் முதல்வா் பழனிசாமி மேற்கொள்ள இருந்த ஆய்வுப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மறைவை ஒட்டி, துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுவதுடன், அரசு தொடா்பான நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாது.

இந்த நிலையில், செப்டம்பா் 2-ஆம் தேதி திருவள்ளூரிலும், 4-ஆம் தேதியன்று திருவண்ணாமலை, விழுப்புரத்திலும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் துக்க அனுசரிப்பு அறிவிப்பைத் தொடா்ந்து, தனது ஆய்வுப் பணிகளை முதல்வா் பழனிசாமி ஒத்திவைத்துள்ளாா். இதற்கான தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என்று செய்தி மக்கள் தொடா்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT