தமிழ்நாடு

நெல்கட்டும் செவலில் பூலித்தேவன் ஜெயந்தி

1st Sep 2020 04:06 PM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும் செவலில் செவ்வாய்க்கிழமை பூலித்தேவன் ஜெயந்தி நடைபெற்றது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெறுவதாக இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து நெல்கட்டும்செவல் பூலித்தேவன் நினைவிடத்தில் அரசு சார்பில் நடைபெறுவதாக இருந்த ஜெயந்தி விழாவும் ரத்து செய்யப்பட்டது.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை புலித்தேவனின் ஏழாவது வாரிசுதாரர் கோமதி முத்துராணி துரைச்சி மற்றும் அவரது குடும்பத்தினர் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT