தமிழ்நாடு

தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது!

1st Sep 2020 05:40 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ‘தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், தொற்று குறைந்து விட்டது என்று நினைக்காமல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும். அத்துடன் தேவையற்ற பயணம், வெளியே சுற்றுவதை ன்று  மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும்.

அத்துடன் தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது. வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT