தமிழ்நாடு

எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம்: எஸ்.பி. சரண் தகவல்

1st Sep 2020 04:10 PM

ADVERTISEMENT

எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார். 

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ போன்ற உயிர் காக்கும் மருத்துவச் சாதனங்களின் மூலம் அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த வருகிறது. 

இந்நிலையில் அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.சரண் இதுகுறித்து இன்று, 'தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. நானும் எனது சகோதரியும் இன்று அவரை சந்தித்தோம். சகோதரியைப் பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்' என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT